கண்களின் ஒளி....பெண்களின் மொழி....

கண்களின் ஒளி....பெண்களின் மொழி....
கண்களின் ஒளி....பெண்களின் மொழி....

Saturday, August 21, 2010

நிலை மாறும் உலகில்...!!!

சிறு வயதில் சிறு குழந்தையான

மழலையின் நவரச நடிப்பு...!!!



அறிந்த வயதில் ஆக்ரோசமான

அர்த்தமில்லாத ஆணவ நடிப்பு...!!!



இளவயது இளைஞாய்

வேலை தேடும் வெட்டி நடிப்பு...!!!



சம்பாதிக்கும் வயதில் சபலத்துடன்

சஞ்சரிக்கும் சராசரி நடிப்பு...!!!



பணத்தை பார்த்து பாதை மாறும்

பச்சோந்திகளின் பரவச நடிப்பு ...!!!



வேவகமின்றி வேகத்துடன் செயல்படும்

விரக்தியான நடிப்பு...!!!



வித்தியாசமான வியாபார உலகில்

விறுவிறுப்பு இல்லாத வெறுமையான நடிப்பு ...!!!



வித்தைகாட்டும் மாய உலகில் ஏமாளியாகும்

ஏழைகளின் எளிமையான நடிப்பு...!!!



சாதனை படைக்கும் வயதில்

சமத்துவம் இன்றி சாதிகளை வளர்க்கும்

சாக்கடைகளின் சாகச நடிப்பு...!!!



நிலை மாறும் உலகில்

மனம் மாறும் மனிதர்களின்

மானங்கெட்ட நடிப்பு...!!!



உலகத்தையே பாழ்படுத்தும்

நாடகம் நலமுடன் நடைபெறுகிறது

மனிதர்கள் என்னும்

நவரச நாடக கலைஞர்களால்....!!!



-சஜீத்

கவிதை அன்றும்...!!! இன்றும்...!!!

அன்று...!!!


கலைஞன்

கடந்த கால கனவுகளாம்

காலக்கண்ணாடியை

கலை நயத்துடன்

கற்பனை திறத்துடன்

காவியத்தின் ஓவியமாக

கலைஞனின் காவியமாக

கவி பாடினான் அன்று

கவிஞர் கண்ணதாசன்.


இன்று...!!!

கவிஞன்

வசந்தகால நினைவுகளாம்

வருங்கால அழிவுகளாம்

வாழ்க்கையை வசபடுத்தி

வையகத்தின் வளத்தை

தன்னுடைய வைர வரிகளால்

வரைந்தான் இன்று

வாழும் கவிதை வைரமுத்து.



-சஜீத்

Thursday, August 19, 2010

விடாமுயற்சி

"தோல்வி உறுதி" என்கிற நிலையிலும் போராடத் துணிந்தவனே உண்மையான வீரன். "வெற்றி பெறுவோம்" என்று நம்புங்கள். இறுதிவரை போராடுங்கள். விடாமல் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்.


-முசோலினி